என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
நீங்கள் தேடியது "குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்"
தாரமங்கலம் அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் 30-க் கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள வணிச்சம்பட்டி பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் இன்று காலை 30-க்கும் மேற்பட்டவர்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் போலீசார் விடவில்லை. நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் பொதுமக்கள் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
எங்கள் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. சுமார் 2000 பேர் வசித்து வருகிறார்கள். சுமார் 6 மாத காலமாக குடிநீர் வரவில்லை. இது பற்றி தாரமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது. ஊரில் போடப்பட்டுள்ள 2 ஆழ்துளை கிணற்றில் போதிய தண்ணீர் இல்லை. எனவே, எங்கள் கிராமத்திற்கு கலெக்டர் சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர், இது தொடர்பாக 5 பேர் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று மனு கொடுத்தார்கள்.
×

X